Are you a member? Register / Login

அடுத்த சாதனைக்கு தயாராகும் பாகுபலி: சீனாவில் 5000 திரையரங்குகளில் வெளியிட முடிவு

16 September 2015

ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. ரூ.250 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி ரூபாயை எட்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. இதில் ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமனா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

உலகம் முழுக்க பல நாடுகளில் வெளியான இப்படம் விரைவில் சீனாவிலும் வெளியாக உள்ளது. சீனாவில் கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளில் ‘பாகுபலி’யை வெளியிட திட்டமிட்டுள்ளது ‘இ.ஸ்டார்’ நிறுவனம்.

இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமை தற்போது தக்கவைத்துக் கொண்டிருப்பது ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படம் தான். சீனாவிலும் இது போன்று சாதனை செய்யுமா என்று விரைவில் தெரிந்துவிடும்.

Share this on social network:

Comment

More News

  • பாயும் புலி – திரை விமர்சனம்

    17 September 2015

    மதுரையில் பெரிய பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வரும் கும்பலுக்கு தலைவனாக பவானி என்பவன் செயல்படுகிறான்.

    View More

  • சர்வதேச திரைப்பட விழாவில் கிருமி

    17 September 2015

    படத்தின் கதையைதான் ரகசியமாக வைத்திருப்பார்கள். கிருமி பட இயக்குனர், தனது படம் திரையிட தேர்வாகியிருக்கும் சர்வதேச திரைப்பட விழா எது என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.

    View More

  • ரஜினியின் கபாலி பர்ஸ்ட்லுக் வெளியீடு

    17 September 2015

    ரஜினி நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘கபாலி’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க இருக்கிறார். மேலும் தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

    View More